புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2020

தீர்மானத்தில் இருந்து விலக அனுமதியோம் - உறுப்பு நாடுகள் உறுதிமொழி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள 40/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என பேரவை உறுப்பு நாடுகள்
உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள 40/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என பேரவை உறுப்பு நாடுகள் உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள நிலையில் அது தொடர்பில் ஆராய ஜெனிவா சென்றிருந்த, சுமந்திரன் அங்கு பல்வேறு தரப்பி­னரையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த சந்திப்புக்கள் மற்றும் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
''கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் ஜெனிவா சென்ற நான், ஐ.நா.மனித உரிமை அலுவலகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டேன். இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள், ஜெனிவாவின் அடுத்த நகர்வுகள் மற்றும் இலங்கையின் நிலைப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக முக்கியமாக கலந்துரையாடினோம்.
அத்துடன் எங்களது நிலைப்பாடு குறித்து தெளிவாக கூறியுள்ளேன். இலங்கை அரசாங்கம் 40/1 என்ற தீர்மானத்தை ஏற்க மறுத்தால் அல்லது அதில் ஏதாவது மாற்றங்களை செய்தால் உறுப்பு நாடுகள் அது தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் விளக்கமளித்தேன்.
மேலும் குறித்த தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என பேரவையின் உறுப்பு நாடுகள் உறுதியளித்துள்ளன” என குறிப்பிட்டுள்ளார்

ad

ad