புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 பிப்., 2020

ஓகஸ்ட்டுக்கு முன்னர் தேர்தல்கள் இல்லை?பொதுஜன பெறமுனைக்குள்ளும் பிரச்சினையா ? மகிந்த,நாமல் - கோத்த,பஸில் இடையே முறுகல்

கோத்தாவின் சிந்தனையின் கீழ் புதிய புரட்சி கொள்கை ஒன்றை கட்டி எழுப்பவும் பழைய ஊழல் தொடர்பானவர்களை நீக்கி புதியவர்களை நியமிக்கவும் மகிந்த குடும்ப ஆடசிக்கு முதுருப்புள்ளி வைக்கவும் நாமலின் ஜனாதிபதி நோக்கிய பிதிர்கால எண்ணங்களுக்கு முடிவு கடத்தவும் கோத்தா எண்ணியுள்ளார் போல தோன்றும் கட்டம் இது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரையில், எந்தவொரு தேர்தலையும் நடத்துவதில்லை என்ற தீர்மானத்துக்கு, தற்போதைய அரசாங்கம் வந்துள்ள​தாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரையில், எந்தவொரு தேர்தலையும் நடத்துவதில்லை என்ற தீர்மானத்துக்கு, தற்போதைய அரசாங்கம் வந்துள்ள​தாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அரசாங்கம் என்ற ரீதியில், பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் உள்வீட்டுப் பிரச்சினைகள் பல உள்ளதால், அவற்றுக்குத் தீர்வு கண்ட பின்னரே, தேர்தலை நோக்கி நகர்வது சாத்தியமானதென்றும், ரணிலிடம் பசில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் வரையில் கால அவகாசம் இருப்பதால், அதுவரையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க அவசரப்பட்டு தேர்தலை நோக்கி நகராமலிருப்பதற்கே அரசாங்கம் ஆலாலோசித்து வருவதாகவும், அறிய முடிந்தது.