24 பிப்., 2020

ஓமந்தையில் பலியானது ஒரு குடும்பமே?

வவுனியா – ஓமந்தை, பன்றிக்கெய்த குளம் பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.இதில் நால்வர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, காரைநகரைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான பார் சோமர் என்று அழைக்கப்படும் ராமலிங்கம் சோமசுந்தரம் (வயது-83), ஆறுமுகம் தேவராஜா (வயது-62), தேவராஜா சுகந்தினி (வயது-51), தேவராஜா சுதர்சன் (வயது-30) மற்றும் அவர்கள் பயணித்த வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (வயது-24) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் குறித்த குடும்பத்தை சேர்ந்த சோமசுந்தரம் லக்சனா (வயது-29) என்பவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.