புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2020

கனடாவையும் ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ்! 24 மணிநேரத்தில் ஒன்ராறியோவில் உக்கிரம்

ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 24 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் இதுவரை ஒன்ராறியோ மாகாணங்களின் 103 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் டொரன்டோவில் ஒன்பது, பீலில் ஒன்று, டர்ஹாம் பிராந்தியத்தில் மூன்று, வாட்டர்லூ பிராந்தியத்தில் இரண்டு, ஹால்டன் பிராந்தியத்தில் ஒன்று, லண்டன்-மிடில்செக்ஸில் ஒன்று, கோபூர்க்கில் ஒன்று, ஹூரான்-பெர்த்தில் ஒன்று, ஹாமில்டனில் ஒன்று மற்றும் ஒட்டாவாவில் இரண்டு பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது நூற்றுக்குஜ்ம் மேற்பட்ட நாடுகளை பதித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ad

ad