புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

31 மார்., 2020

ஐரோப்பிய நாடுகளை முற்றாக முடக்கியது கொரோனா! பல மடங்காக உயரும் பலி எண்ணிக்கை

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் வீரியம் பெற்று வேகமாக பரவிவருவதனால் அந்நாடுகள் பல முற்றுமுழுதாக முடங்கிப் போயிருக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் அதிகளவான உயிர்களை காவு கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி, ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள், 3.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.

உலக சுகாதார அமைப்பு(WHO) வெளியிட்ட புள்ளி விவரங்கள்படி, கொரோனா வைரஸுக்கு திங்கள்கிழமை காலை நிலவரப்படி உலகில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்து 196 ஆக இருக்கிறது.

கொரோனாவால் தற்போது வரை உலகம் முழுவதும் 33,976 பேர் பலியாகியுள்ளனர்.

3 லட்சத்து 61 ஆயிரத்து 457 பேர் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஐரோப்பிய நாடுகளில் மட்டும் 21 ஆயிரத்து 496 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களில் மட்டும் 50 ஆயிரம் கொரோனா நோயாளிகள் உருவாகியுள்ளனர், இதில் ஸ்பெயினில் ஒரேநாளில் அதிகமான அளவு உயிரிழப்பு ஏற்பட்டது. ஸ்பெயின் நாட்டில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 838 பேர் உயிரிழந்தனர் என்று அந்த நாட்டு சுகாதாரத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் கடந்த 3-ம் திகதி முதல் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் அடுத்த 25 நாட்களில் 6,525 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 6 ஆயிரத்து 549 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதன் மூலம் ஸ்பெயினில் மட்டும் 78 ஆயிரத்து797 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இதில் ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மட்டும் கொரோனா வைரஸுக்கு 3 ஆயிரத்து 82 பேர் உயிரிழந்தனர், அதாவது நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 47 சதவீதம் மாட்ரிட் நகரில் ஏற்பட்டது. 22 ஆயிரத்து 677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இத்தாலியில், கொரோனா வைரஸால் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மட்டும் 10 ஆயிரத்து 779 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் நடந்த மரணங்களில் மூன்றில் ஒருபகுதி இத்தாலியில் நடந்துள்ளது. ஸ்பெயின், சீனா பாதிக்கப்பட்டதைக் காட்டிலும் மோசமாக இத்தாலியின் நிலை மாறியிருக்கிறது.

கொரோனா வைரஸால் இத்தாலியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97 ஆயிரத்து 689 ஆகவும், அதிலிருந்து 13ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

மறுபுறம், ஜெர்மனியில் கொரோனா வைரஸால் உயிரிழப்பு 541 என்று குறைவாக இருந்தாலும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது, 1,228 பேர் பலியாகியுள்ளனர்.

இவையொருபுறமிருக்க, பெல்ஜியம், நெதர்லாந்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,702 பேர் பெல்ஜியத்தில் புதிதாக பாதிக்கப்பட்டு, 10ஆயிரத்து 836ஆக அதிகரித்துள்ளது. இங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 431 ஆக உயர்ந்திருக்கிறது.

நெதர்லாந்தில் கொரோனாவால் 771 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 866 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், இந்தியாவும் இலங்கையும் அனைத்து வழிகளையுடம் அடைத்து ஊரடங்குச் சட்டம் பிறப்பித்திருக்கிறது.

எனினும் தற்போது வரை இலங்கையில் 120 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் பலியாகியிருக்கிறார்கள். மேலும் 11 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.