புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2020

தமிழரசின் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்பங்கள் தீர்க்கப்பட்டுள்ளன – சிவஞானம் தெரிவிப்பு

பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் தற்போது தீர்க்கப்பட்டு விட்டன என்கிறார் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவானம்.



நடைபெறவிருக்கும் தேர்தல் குறித்தும் தேர்தல் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பிலும் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

ஐந்து வருடம் முடிய நடக்க வேண்டிய தேர்தல் நான்கரை வருடத்திலேயே நடக்கிறது. அது தெற்கத்தேய இனவாதிகளின் தேவைக்காக 6 மாதம் முன்னதான தேர்தலாக நடக்கிறது. ஏனெனில் இன்றைக்கு இருக்கின்ற அரசாங்கம் பலவீனமான உள்ள நிலையில் அவர்கள் இத் தேர்தலில் வெற்றி பெற்று தங்களைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவே பாராளுமன்றத்தைக் கதைத்து தேர்தலை நடாத்துகின்றனர்.

ஆகவே இத் தேர்தலை தமிழர் தரப்பும் ஒரு மாற்றத்திற்கான அடிப்படையாகப் பார்க்கலாம். ஏனெனில் கடந்த அரசில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் நடைபெற்று முற்றுப் பெறாமல் இருக்கிறது. அந்த அரசியலமைப்பில் முன்னெற்றங்களும் உண்டு. அதே நேரம் பின்னடைவுகளும் இருக்கத் தான் செய்கின்றன. ஆகவே அந்த அரசியலமைப்பை முன்கொண்டு செல்வதற்கான வாய்ப்பாக இத் தேர்தலை நாங்கள் பயன்படுத்தலாம்.

ஏற்கனவே நாங்கள் கொண்ட பின்னடைவுகளின் வாய்ப்பின் தளமாக இத் தேர்தலைப் பார்க்கலாம். ஆகையினால் முன்னொக்கிச் செல்வதற்கான இந்த வாய்ப்பை உரிய முறையில் நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு எமது மக்களும் தமது ஆதரவைம் ஒத்துழைப்பையும் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் உண்மையில் பெரிய அளவில் பிரச்சனை வந்தது யாழ்ப்பாணத்தில் தான். ஆனால் வன்னியில் பெரியளவில் பிரச்சனைகள் இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையிலோ அல்லது ஏனைய கட்சிகளைப் பொறுத்தவரையிலோ பிரச்சனைகள் இருக்கவில்லை.

ஆனால்; தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கிறதா இல்லையா என்ற பிரச்சனை வந்தது. அந்த வகையில் அதில் ஒருவருக்கு கொடுத்து இன்னொருவருக்கு கொடுக்காமல் விடுகின்றது என்றால் அது எங்களுக்குள்ளேயே உள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்பதால் பாகுபாடின்றி எல்லாருக்குமு; கொடுப்பது என்று பொதுவாகவே தீர்மானிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுததவரையில் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஏற்கனவே ஐந்து பேர் இருக்கின்றார்கள். அதே நேரம் அதற்கு மேலதிகமாக வேட்பாளர்களும் இருக்கிறார்கள். தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் எங்களுக்கு ஏழு இடங்கள் யாழில் இருந்தன. அதில் நான்கு பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள். ஐந்தாவது பெண் வேட்பாளர் என்ற ரீதியில் சசிகலா ரவிராஐ; தெரீவு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் இன்னொரு பெண் வேட்பாளர் தெரிவாக அம்பிகா சற்குணநாதன் தெரீவு சம்மந்தமாக ஒரு பிரச்சனை இருந்தது. அவர் உள்ளுரில் வசிக்காதவர் பிரச்சனை தெரியாது கட்சியில் உறுப்புரிமை இல்லாதவர் என்ற பிரச்சனை இருந்தது. அதே நேரத்தில் மகளீர் அணியினர் கூடு ஆட்செபனை தெரிவித்தாலும் கூட அது பெரிய பிரச்சனையில்லை. அது மட்டும் தான் அதிருப்தியான சற்று முரண்பாடான நிலையாக இருந்தது. மற்றும் படி கட்சிக்குள்ளே அல்லது கூட்டமைப்பிற்குள்ளோ வேறு பிரச்சனைகள் ஒன்றும் இல்லை.

ஆகையினால் தற்போது வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்பிற்ள் தற்போது பிரச்சனை இல்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்த பிரச்சனையும் சீர்செய்யப்பட்டுள்ளதாகவே நம்புகின்றேன். ஆனால் சலசலப்பாக சில கருத்தக்கள் சொல்லப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் யாழிலே வன்னியிலோ மட்டக்களப்பிலோ அம்பாறையிலே திருகோணமiலிலோ பிரச்சனை இல்லை. ஆனபடியால் வேட்பாளர் தெரீவு ஓரளவிற்கு திருப்தி கரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

ஆந்த வேட்பாளர் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படுகின்ற அதே நேரத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும். அவ்வறான ஒரு நிலையில் தான் வேட்பாளர்கள் தொடர்பில் முழுமையாக வெளிப்படுத்தப்படுமென்று நினைக்கிறேன் என்றார்.

ad

ad