புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 ஏப்., 2020

வட கொரியாவிற்குள் நுழைந்தது சீனாவின் விசேட மருத்துவக் குழு

சீனாவின் விசேட மருத்துவக் குழு வடகொரியாவிற்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்கின் பிறந்த தினக் கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை.

கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

கடந்த 2011-ம் ஆண்டு அதிபராக வந்தபின் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் தவிர்த்தார்.

வட கொரிய அதிபருக்கு நடந்த இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க உளவுத்துறையும் இதைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு உடல் நிலை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை சீனா அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, வடகொரிய அதிபர் கிம் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது