புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2020

கொரோனா வைரஸ் பற்றி எங்களுக்கு கவலை இல்லை! கொண்டாட்டத்தில் இருக்கும் ஐரோப்பிய நாடுபெலாரஸ்

கொரோனா அச்சத்தால் ஐரோப்பிய நாடுகள் கதி கலங்கி நிற்கும் நிலையில், பெலாரஸ் நாட்டில் வழக்கம் போல் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையில் இல்லாமல் உற்சாகமாக இருந்து வருவது மற்ற நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பரவிய இந்த கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளான, இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளை உலுக்கி வருகிறது.

இந்த ஐரோப்பிய நாடுகளின் வரிசையில் இருக்கும் பெலாரஸ் நாட்டில் இதுவரை 152 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆனால், அந்நாட்டில் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாசெங்கோ அந்நாட்டின் தலைநகர் மி்ன்ஸக்கில் நடந்த ஹாக்கி போட்டி ஒன்றை பார்வையிட்டார்.


பார்வையாளர்கள் மத்தியில் பேசிய அவர், இங்கு வைரஸ் தொற்று எதுவும் இல்லை. ஏதாவது தென்படுகிறதா எதுவும் இல்லை. விளையாட்டு தான் வைரஸிற்கு எதிரான மருந்து. ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் தான் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கால்பந்தாட்ட போட்டியும் நடைபெற உள்ளது. தலைநகர் மின்ஸ்கில் பெரும்பாலும் யாரும் முகக்கவசம் அணியவில்லை. ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் வழக்கம் போல் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது

ad

ad