மீட்கப்பட்ட வன்கூடுடன் விடுதலைப்புலிகளின் வரி சீருடையும் ஆயுதமும்
கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு குறித்த எலும்புக்கூடுகள் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் நிறுவன பணியாளர்களால் தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பகுதி விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவலரண் அமைந்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.