புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2020

சர்வதேசத்துடன் இணைந்த அணுகுமுறையே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எமது நகர்வு! வடமராட்சியில் முழங்கினார் மாவை சேனாதி

Jaffna Editor
இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கான உரிய தீர்வினை தராவிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.



வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை வடமராட்சி நெல்லியடி தொகுதியில் உடுப்பிட்டி தொகுதி தலைவர் ப.சுரேந்திரன் மற்றும் பருதித்துறை தொகுதி உப தலைவர் ச.சுகிர்தன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் தமிழரசு கட்சியின் வேட்பாளர்களான சகிகலா ரவிராஜ், சி.சிறிதரன், த.தபேந்திரன், ஈ.சரவணபவன், இமானுவேல் ஆனோல்ட், ஏ.சுமந்திரன் ஆகியோரும் பருத்தித்துறை, உடுப்பிட்டி தொகுதி தமிழரசு கட்சி நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் என சுமார் 100 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்

ad

ad