புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2020

மதத் தலங்களில் பிரசாரம் பெருங்குற்றம்! - எம்.பி பதவியும் பறிபோகும்.

Jaffna Editor
அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்து அல்லது மதத் தலங்களில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானாலும் அவரது எம்.பி. பதவி பறிபோகக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

விவாதமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ மதத் தலங்கள் மற்றும் புனித இடங்களில் கட்சி வேட்பாளர்களை ஊக்குவித்து பிரசாரம் மேற்கொள்வது 1981ஆம் பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 79 ஆவது பிரிவின் கீழ் கடுமையான குற்றமாகும். இதனை அழுத்தமாக கூறிக்கொள்ள விருப்புகின்றோம். இதனை மீறிச் செயற்படும் பட்சத்தில் ஒருவர் வெற்றிபெற்றாலும் அவரின் எம்.பி. பதவி பறிபோகும்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் பலர் அரச வாகனங்களை பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அரச வாகனங்களை தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்துவது பாரிய குற்றமாகும் என்றார்.

ad

ad