புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

30 ஜூலை, 2020

சுவிஸின் காவல்துறையில் புதிதாக ஒரு ஈழத்து தமிழன்.மண்ணுக்கு பெருமை சேர்த்த இளவலை வாழ்த்துவோம் 
புலம்பெயர் நாடுகளில் எல்லாம்  தமிழன் பல  சாதனைகளை படைத்துவருகின்றான் . ஈழத்து தமிழன் எடடாத துறைகள் இல்லைகிடடாத பதவிகள்   இல்லை . புலம்பெயர் நாடுகளில் சுவிட்சர்லாந்தில் அண்மைக்காலங்களில்  எமது பரம்பரை இளவல்கள்   அதியுன்னத   தொட்டு  வருகின்றனர் .இந்த வகையில் சுவிஸின்  பாதுகாப்பு , நம்பிக்கை , ரகசியம் பேணல் ,,தூய்மை , துணிச்சல் ,உறுதி ,தேசியப்பற்று என தொட்டு நிற்கும் துறை  காவலர் பதவி .25 வயதிலேயே பாசல்   மாநகரில்  வாழ்ந்து வந்த சுப்பிரமணியம்    புதல்வன்  நிலவன்  இப்போது அந்த  உன்னதத்தை அடைந்து சாதித்திருக்கிறான் . ஈழத்தில் புங்குடுதீவை சேர்ந்த இவரது பெற்றோர் சுவிஸில்  30 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றார்கள் . இவர்களும்  தாயகத்துக்கு  பல்வேறு வழிகளிலும்   பங்களிப்பு செய்து வருவோர் என்பதும் குறிப்பிடத்தக்கது .  நிலவன்  அவர்கள்  இந்த  உன்னத துறையில் மென்மேலும் சிறந்திட  வாழ்த்துகிறோம்