புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

3 ஜூலை, 2020

Jaffna Editorபாடசாலைகள் 6 ஆம் திகதி முதல் ஆரம்பம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாத காலமாக மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (06.07.2020) முதல் ஆரம்பிக்கப்படுகிறதென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, உயர்தர வகுப்பு அதாவது 13 ஆம் தரம், 11 ஆம் தரம் மற்றும் 5 ஆம் தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் அடுத்த திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும்.

சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி கல்வி நடவடிக்களை திங்கட்கிழமை முதல் ஆரம்பிப்பதற்கான திட்டமிடல்கள் இவ்வாரம் முழுவதும் செயற்படுத்தப்பட்டன.

அத்துடன் சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்பறைகளை ஒழுங்குப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது