புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2020

கம்பஹா மாவட்டம் முழுவதும் 5 நாட்களுக்கு ஊரடங்கு

Jaffna Editor
கம்பஹா மாவட்டம் முழுவதும் இன்று இரவு தொடக்கம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் இன்று இரவு 10 மணிக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் ஊரடங்குச் சட்டம், திங்கட்கிழமை அதிகாலை 05 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டம் முழுவதும் இன்று இரவு தொடக்கம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் இன்று இரவு 10 மணிக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் ஊரடங்குச் சட்டம், திங்கட்கிழமை அதிகாலை 05 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையிலேயே, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடவத்தை பிரதேசத்தில் 6 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து. கடவத்தை- ரன்முத்துகல, பங்களாவத்த பிரதேசங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு 7.30 மணியில் இருந்து இந்தப் பிரதேசங்களுக்கு செல்வதற்கும், அங்கிருந்து வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடவத்த- மஹர பொதுசுகாதார பரிசோதகர் பிரதீப் வேரகல தெரிவித்துள்ளார்.

இந்த பிரதேசத்தைச் சேர்ந்த 200 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், மீன் வியாபாரி, அவரது மனைவி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட 6 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை கொட்டாவ மீன்சந்தையிலும் வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

ad

ad