புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2020

என் நினைவுகளில் இருந்து ரூபன் சர்மா ----
---------------------------------------------------------------
இரு வருடங்களின் முன் என்னால்  முன்னெடுக்கப்பட மடத்துவெளி - ஊரதீவு கேரதீவு  வீதி மின்விளக்கு பொருத்தும் பணியை  நானும் என் நண்பர்களும்  கேட்டுக் கொண்டபடி   5  நாட்களாக   கடும் வெய்யில் காலத்திலும்  கஷடம் பாராது  பிரதேச சபை ஊழியர்களோடு  நின்று  உதவி  உபசரித்து  முழுமையாக  என்  திட் டத்தை நிறைவேற்றி தந்து வைத்த  நல்ல உள்ளம்,  85 மின்விளக்குகளை  பிரதேச சபை ஊழியர்களின்  நேர ஒழுங்கின்படி   அவர்கள்  வரும்போது ஓடிச்சென்று ஒத்துழைத்த உங்கள் சேவையை இக்கணம்  என் மனதில் நிறுத்தி பா ர்க்கிறேன்  .கடந்த வருடம் ஏப்ரலில் ஊரதீவு சனசமூக நிலையத்துக்கு  நான்  கட்டிக்  கொடுத்த  சுற்றுமதில் நுழைவாயில் திறப்பு விழாவின் போதும்  கெளரவ விருந்தினராக  வந்து என்னையம் கௌரவித்து சிறப்பித்தீர்கள் . புலம்பெயர் தேசத்தில் நாம் முன்னெடுத்து  செய்து கொண்டிருக்கும்  பாணாவிடையான் ராஜகோபுர மற்றும் ஆலய திருப்பணியில்  கூட பூசகர் என்ற நிலையில் நின்று விடாது  பல்வேறு  காலக்கட்டத்திலும் எம்மை உற்சாகப்படுத்தி  உறவுகளை ஊக்குவித்து  அடிக்கடி  அவர்களின்  ஆதரவை  வேண்டி  நீங்கள்  செய்து கொண்டிருந்த பிரசாரப்பலம்  90 வீதம்  நாம் முடித்திருக்கும்  திருப்பணிப் பாதைக்கு  உரமூட்டியது என்பதையும் நாம் மறவோம் . ஊரின் பசுவதை குற்றங்களை களைய வேண்டிய நீங்கள்  எடுத்த  துணிச்சலான  செயல்பாட் டையும்  தருணத்தில் நினைவு கூறுகின்றோம் . பானாவிடையான்  அருளோடு  உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் சாந்தி சாந்தி சாந்தி 

ad

ad