புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2020

நல்லூர கந்தசுவாமி ஆலயத்தில் கட்டுப்பாடு?

Jaffna Editor
தற்போது நாட்டில் கொரோணா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வடக்கு மாகாணத்தில் கொரனோ தொற்று நிலையினை தடுக்கும் முகமாக வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினால் அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக தனித்தனியாக சுற்றறிக்கைகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆலயங்களில் பூசை வழிபாடுகளின் போதுபின்பற்ற வேண்டிய சுகாதாரநடைமுறைகள் தொடர்பான சுற்றறிக்கைக்கு அமையவரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் கலந்து கொள்ளும் அடியவர்கள் தமது பதிவுகளை மேற்கொண்டு முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியே ஆலயத்திற்குள் சென்று பூசை வழிபாடுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.



ஆலயத்தின் வெளி வீதியிலிருந்து ஆலயத்துக்குள் நுழையும் அனைத்து பக்தர்களும் பதிவுகளை மேற்கொண்டு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒரே நேரத்தில் குறிப்பிட்டளவு எண்ணிக்கையான பக்தர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப் படுகின்றார்கள்.

ad

ad