புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2020

ஊரடங்கு நீக்கம் - பல பகுதிகளை தனிமைப்படுத்த முடிவு

மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணியுடன் நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணியுடன் நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கொழும்பில் இனங்காணப்பட்ட 12 பொலிஸ் பிரிவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ள தொடர்மாடி கட்டிடங்கள் சிலவற்றை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் குறித்த பகுதிகளில் இருந்தே இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மட்டக்குளிய, மோதர, புளூமெண்டல், மாளிகாவத்த, பொரள்ள, தெமடகொட, கொட்டாஞ்சேனை, வெல்லம்பிட்டிய, கிரான்பாஸ், ஆட்டுப்பட்டி தெரு, வாழைத்தோட்டம் மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, பேலியகொட, கடவத்த, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜாஎல மற்றும் சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் களுத்துறை மாவட்டத்தில் ஹொரண மற்றும் இங்கிரிய பொலிஸ் பிரிவுகளும் வேகட கிராம் சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குருணாகல், குளியாபிட்டிய, கேகாலை மற்றும் மாவனெல்ல பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமும் நாளை காலை 5 மணியுடன் நீக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad