புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 டிச., 2020

தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள்;தமிழ் தேசிய மக்கள் இனியும் பிரிந்து நிற்க கூடாது-இரா.சாணக்கியன்

www.pungudutivuswiss.com
தமிழ் மக்களிற்கு எதிராக செயற்படும் இந்த அரசாங்கத்தில் இருக்கும்  தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும். உண்மையான தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் என்றால், அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக வெளியேறுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் 33 வது மாதாந்த அமர்வில் புதிய 2021ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு இன்று(10) கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தனி சிங்கள நபர்கள் தமிழ் பகுதிகளில் காணி வாங்கி குடியிருப்பதற்கு நாம் எதிர்ப்பில்ல. ஆனால், அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கில், ஆயரக்கணக்கில் சிங்களவர்களை கொண்டு வந்து குடியிருத்துவதை ஏற்க முடியாது. அது இனஅழிப்பு.
இன்று ஆளுங்கட்சியுடன் இணைந்து கொங்கிரீட் பாதைகளின் பின்னால் திரிபவர்களிற்கு இது புரிவதில்லை. கொங்கிரீட் பாதைகளை நாம் ஏற்படுத்தலாம். ஆனால், எமது காணிகளை இழந்தால் எதுவும் செய்ய முடியாது.
நேற்று இரவு கூட, மயிலத்தமடுவிலிருந்து தொலைபேசியில் அழைத்து சொன்னார்கள், தம்மை உடனடியாக அந்த பகுதயிலிருந்து அகலும்படி கத்தி, வாளுடன் வந்து மிரட்டியதாக சொன்னார்கள்.
காதைீவில் ஒரு அரச காணியை துப்பரவாக்கி பயிர்ச்செய்கை செய்தால் அரச அதிகாரிகள் நடவடிக்கையெடுப்பார்கள். ஆனால், அங்கு பெருமளவில் அழிக்கப்பட்டு விவசாயம் செய்கிறார்கள். ஒரு சில அதிகாரிகள் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபருக்கு நடந்ததை பார்த்து பயந்திருக்கலாம். அப்படி நடக்குமென மிரட்டப்பட்டு வைத்திருக்கிறார்களோ தெரியாது.
இந்த நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திய முக்கிய அரசியல் தலைவர்களாலேயே தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள் முடியவில்லை. பண்டாரநாயக்க, ஜேஆர், மஹிந்தவினால் முடியாததையே- தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்கள் செய்வதை- தனது 5 வருடத்தில் செய்து காட்ட வேண்டுமென செயற்படுவதாக கூட இருக்கலாம்.
தமிழ் தேசிய மக்கள் இனியும் பிரிந்து நிற்க கூடாது. அரசாங்கத்துடன் நிற்கும் அனைத்து தமிழ் உறுப்பினர்களும், தமிழ் மக்களிற்கு நிகழும் அநீதிகளை பார்த்து வெளியேற வேண்டும். உண்மையிலேயே நீங்கள் தமிழர்கள் என்றால், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றால், தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் என்றால் உடனடியாக இந்த அரசின் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து அரசிலிருந்து வெளி

ad

ad