புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2020

மணி தரப்புடன் இரகசிய உடன்பாடு இல்லை

www.pungudutivuswiss.com
யாழ். மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபைகளில் மணிவண்ணனுடன் எந்த இரகசிய உடன்பாடும் செய்து கொள்ளவில்லை என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபைகளில் மணிவண்ணனுடன் எந்த இரகசிய உடன்பாடும் செய்து கொள்ளவில்லை என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

“நாம் கட்சி ரீதியாக சிந்திக்கவில்லை. மக்கள் நலன் சார்ந்து சிந்தித்தோம். மாநகரசபை நிர்வாகம் கலையும் அபாயமிருந்தது. அதனால் இரண்டு சபைகளிலும் செயற்பாட்டாளர்களை ஆதரிக்க முடிவெடுத்தோம்.

சிறப்பான வரவு செலவு திட்டமொன்றை தயாரித்து மககளிற்கு வழங்குவதே எமது நோக்கம்.

மணிவண்ணன் தரப்புடன் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. பிரதி மேயர், உப தவிசாளர்களாக ஈ.பி.டி.பி உறுப்பினர்பன் தெரிவு செய்யப்படுவதென மணிவண்ணன் தரப்புடன் இரகசிய ஒப்பந்தங்கள் எதுவும் செய்யவில்லை.

உள்ளூராட்சி மன்றங்களில் உப தவிசாளர்கள் தாமே பதவி விலகினாலேயே புதியவர்கள் நியமிக்கப்படலாம். நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் அகற்றலாமென்பது தெளிவற்ற விகிதமாகவே சொல்லப்பட்டுள்ளது. அதனால் பிரதி முதல்வர், தவிசாளர்கள் ஒன்றில் தாமே பதவி விலக வேண்டும். அல்லது, புதிய நிர்வாகத்துடன் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்

ad

ad