புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2021

எமது நினைவலை  - கொறணர் பாலா அண்ணா 

---------------------------------------------------------------------------
யா ர்  இந்த  கொறண ர் பாலா .?  புங்குடுதீவு  9 ஆம்  வடடாரத்தில்  பிறந்து  வரதீவில்  வாழ்ந்து வந்த தவமணிதேவி ( எனது தந்தையின் மூத்த சகோதரியி ன் இளைய  மகள் ) அவர்களை மணந்து வரதீவிலேயே  வாழ்ந்து வந்தவர் . இந்த அப்பையா பாலசுந்தரம் இளமைப்பருவத்திலேயே எமது மடத்துவெளி சனசமூக நிலைய பாசறைக்கு  வந்து பட்டை  தீட்டிக்கொண்டார்  என்றே சொல்லலாம் .எமது சனசமூக நிலையம்  78 இல் இருந்து  85 வரை வருடந்தோறும்  சிவராத்திரி விழாவினை   செய்து புங்குடுதீவுக்கு அழகு சேர்த்தது  .  அந்த விழாக்களுக்கு  புகழ் சேர்த்ததே   நிலையத்தின் மலர்விழி நாடக மன்றத்தின்  அற்புதமான  நாடகங்களே .எஸ் கே மகேந்திரனின்  சட்டதரணி வரவேற்பு விழாவும் உள்ளடங்கும். எமது முதலாவது  சிவராத்திரி விழாவிலே அந்தஸ்து சமூக நாடகமும் , செத்தவன் சாக  இருப்பவனை சாகடிப்பதா ? என்ற இளகிய நாடகமும் அரங்கேறி  மக்களை  என்றும்  மறவா நிலைக்கு ஆட்கொண்டன அந்த ஒரே விழாவிலே  மடத்துவெளி ஊரதீவு மண் பல  அதியுன்னத  நடிகர்களை மண்ணுக்கு உருவாக்கி கொடுத்தது .அந்தஸ்த்து நாடகத்தை எஸ்.எம் .தனபாலன்  இயக்க  தனபாலன் ,தர்மபாலன் ,சந்திரபாலன் ,இராசமாணிக்கம் சந்திரசேகரம் அமிர்தலிங்கம் சிவபாலன் மரு தலிங்கம் உட்பட இன்னும்பலரும் நடித்திருந்தனர் .அடுத்த இலட்சிய நாடகத்தை    .அ.சண்முகநாதன்  இயக்கி இருந்தார் .எமது ஊரில்  ஒருவர் இறந்து விட்டால் அவரது இறுதிக்கிரியைகளுக்கு தொடரும்  ஏனைய  சடங்குகளுக்கும்  பெரும்செலவு உண்டாகும் .மேளம் பாடை  மரணவிசாரணை அதிகரிக்கான  லஞ்சசெலவு , உணவு சடங்கு செலவு என பெருமளவு பணம் செலவாகும் .வறுமையான அக்குடும்பங்களும் இந்த செலவை  எப்படியோ  செய்தெ ஆகவேண்டும் இல்லையேல் ஊர் மானம்  போகும் அல்லது கடடாயமுறை கூட .  இதனை ஒழிக்கவென மேளத்துக்கு பதிலாக  சங்கு சேமக்கலம் பாடைக்கு பதிலாக  கிடுகுப்பன்னம் என மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் உருவாக்கப்படட நாடகமே  இது . இந்த நாடகத்தில்  சண்முகநாதன் பாலசுந்தரம் தர்மபாலன் தனபாலன் இராசமாணிக்கம் ,சந்திரபாலன் சிவபாலன் கருணாகரன் ரவீந்திரன் வேலுப்பிள்ளை ரவி கோணேஸ்வரன் யோகேஸ்வரன் திகிலழகன்  சிவகுமார் திருச்செல்வம் கருணாகரன் சிவலிங்கம் வித்தி சிவராசா என  பலர்  சிறப்பாகவும்  நகைச்சுவையாகவும் நடித்து சிறப்பித்தனர் இந்த நாடகத்தில் தான்  எங்கள்  அன்புக்குரிய   பாலா அண்ணர்  கொறனர் வேடமிட்டு  தமிழக நடிகர் மேஜர் சுந்தராசனுக்கு இணையாகவே  நடித்து உச்சத்தை  தொட்டிருந்தார் அந்த காலங்களில்  மரண விசாரணை அதிகாரியை சமாளிப்பதென்பதே  பெரும் பாடாக இருக்கும் திடீர்  இறப்பு அல்லது தற் கொலை என்றால்  உடலை  கீறிக்கிழிக்கப்போறாங்களே என்று உறவினர் ஓலமிட்டு  அழுவர் அந்த கொரனரின் கெடுபிடி ஆணவசெயல்பாடு இழுத்தடிப்பு  உறவினரை ஆத்திரமடைய செய்யும் . கீறிக்கிழிக்காமல்  உடலை  கொடுக்க வேண்டுமெனில்  மறைமுகமாக லஞ்சம் வாங்கும் எண்ணத்தில் தான் இந்த  இழுத்தடிப்பு இருக்கும்  இந்த காட்சியை  தத்ரூபமாக பார்ப்போரை உணர்ச்சிவசப்படும் அளவுக்கு  உச்ச நடிப்பை காடி  வெளிப்படுத்தியவர்  பாலா  அண்ணா .அன்று முதல்    அவரின் செல்லப்பெயர் கொரோனர் தான் ,முதல் நாடகமான அந்தஸ்தில் ப்ரோக்கர் பாத்திரத்தில் சிறப்பாக  நடித்து பெயர் வாங்கிய  இராசமாணிக்கம் அண்ணைக்கும்  ப்ரோக்கர் என்றே  செல்லப்பெயர் கொண்டழைப்போம்  சிவராத்திரி  நெருங்குகிறது என்றால்  எமது கிராமமே  ஒரு  மாதத்துக்கு முன்னரே உஷாராகி விடும் ஏனெனில் கமலாம்பிகையில் எமது நாடக ஒத்திகை  ஒரு மாதமாக  நடக்கும் .ஒவ்வொரு காட்சியும் மாறும் இடைவெளிக்குள்  பாலா அண்ணனின் நகைச்சுவை பேச்சுக்கும் மாணிக்கண்ணையின் மேண்டலின்  இசைக்கும் அவர்களின் பக்கத்தில் ஓடி போய்  இருந்திடுவோம் தர்மபாலனும் சாணுமுகநாதனும் வாங்கடா வாங்கடா   என்று  கோபத்தில் அழைப்பார்கள்  
ஒத்திகை பார்க்கவே  ஊர் குமரிகள் கிழவிகள் இளைஞர்கள் என்று  பெரும் கூடடமே  எம்மோடு  சேர்ந்து  வந்திருந்து நித்திரை  விழித்து மகிழ்ந்திருக்கும் அந்த  நினைவுகள் சுகமானவை .பாலா  அண்ணாவோடு கூடி நடித்த அனுபவங்களோடு  எமது சக கலைஞர்கள்  இன்றைக்கும்  கனடா  .சுவிஸ் , பாரிஸ்  என்று நடிப்புத்திறமையை  காட்டி சிறந்து வாழ்கிறார்கள் 
பாலா  அண்ணா  நகைச்சுவைக்கு சொந்தக்காரர் . கொழும்பு நகரில் தொழில் செய்த  அனுபவத்தில் சிங்களத்தில் சரளமாக  பேசுவார் . எமது இளம்பராயத்தில் பகிடி விடுவது நகைச்சுவையாக பேசுவது என்பது பெரும் பொழுதுபோக்கு . மாலை வேளையில்  கரப்பந்தாடடம் அல்லது உதைபந்தாடடம் விளையாடி முடிய  சுமார்  7-7.30 க்கு  வந்து சனசமூக நிலைய முன்பக்கம்   இருந்து கதை கேட்க  கூடுவோம் .பாலா அண்ணா  தொடங்குவார் கொழும்பு பகிடிகளை அப்படியே   சிங்களத்திலும் சொல்லி  சொல்லி காட்டுவார்      சொல்லும்  விதத்திலேயே  வயிறு குலுங்கி சிரிக்கும்படியாக  டைரக்ட் பண்ணிதான்  சொல்வார் .நள்ளிரவு 12  ஆகியும் பொறுத்திருப்போம். வயது வித்தியாசம் பார்க்காமல்  எல்லோரோடும்  எளிமையாக  பழகும் விதம் பலரை கவர்ந்திழுக்கும் புதிய சைக்கிள் ஒன்றை  வாங்கி  அதனை பூக்கள்  கொண்டு  அலங்கரித்து கோர்ன் ஒன்று பூட்டி அழகு படுத்தி  வைத்திருந்தார்  அண்மையில்  மடத்துவெளி முருகன் ஆலய  திருவிழாவின் போதும் .பிள்ளையார்  கோவில் கும்பாபிஷேகத்தில் கண்டு  அளவளாவி  படம்  எடுத்துக்கொண்டு விடை பெற்றேன் எனது மைத்துனியின் கணவர்   என்பதால்  அவரது இல்லத்துக்கு  போகும்  எண்ணம்  இருந்தது . வவுனியாவில் வசித்து  வந்ததனால் அது  சீக்கிரம் கைகூடவில்லை  அந்த நேரம்  வரும்  என காத்திருந்தேன் அதுக்கு முன்னரே காலன்  கூட்டி  சென்றுவிடடான் .. என்செய்வேன் எமது பாசறையின் சிறந்த ஒரு மனிதன் எம்மை  விட்டு  பிரிந்து விடடார் அவரின்  ஆத்மா சாந்தியடைவதாக மடத்துவெளி சனசமூக நிலையத்தின் மலர்விழி நாடகமன்ற குழுமம்   உங்களை என்றும்  நெஞ்சினிலே  சுமந்திருக்கும்  எமது ஆழ்ந்த அனுதாபங்களை குடுமத்தினருக்கு  தெரிவித்துக்கொள்ளும் -மடத்துவெளிசனசமூகநிலையம் - மலர்விழி நாடகமன்றம் - கமலாம்பிகை பழைய மாணவர் சங்க  புலம்பெயர் கிளைகள் .புலம்பெயர்  புங்குடுதீவு மக்கள் 

ad

ad