புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2021

பொத்துவில் தொடக்கம் அக்கரைப்பற்று வரை போராட்டக்கார்கள் மீது சிறீலங்கா ஆயுதப்படையினர் கெடுபிடி

www.pungudutivuswiss.com
வடகிழக்கு சிவில் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரை அகிம்சைவழியினலான போராட்டம் இன்று காலை (03.02.2021) 10.00 மணியளவில் கடும் கொட்டும் மழையிலும் பொத்துவில் நகரில் ஆரமபமாகிய போது, போராட்டத்தின் தடுத்து நிறுத்தும் வகையில் சிறீலங்காவின் விசேட படையினர் போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

சிறீலங்காப் படையினரின் கடுமையான கெடுபிடிகள் அனைத்தையும் உடைத்தெரிந்து கொண்டு போராட்டப் பேரணி மட்டக்களப்பை நோக்கி புறப்பட்டது. எனினும், பொத்துவில் தொடக்கம் அக்கரைப்பற்று வரை போராட்டத்தினை தடுப்பதற்காக சிறீலங்காப்படையினர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது.

அக்கரைப்பற்று பகுதியை சென்றடைந்தது சிறீலங்காப்படையின் குண்டான்தடியடித் தரப்பினர் மற்றும் தண்ணீர் பீச்சான் பகுதியினர் என அதிகளவான படையினர் குவிக்கப்பட்ட போதிலும், அக்கரைப்பற்று பகுதியில் முஸ்ஸிம் தரப்பினர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணியில் கலந்து கொண்ட போது, தாக்குதல் நடாத்த தயாராக இருந்த ஆயுதப்படையினர் படையினர் கலைந்து சென்றனர்.

போராட்டப் பேரணியை தடுக்கும் முகமாக நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்19 தொற்றுநோயைக் காரணம் காட்டி போரட்டத்தரப்பினருக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றிருந்தனர். நீதிமன்ற தடை உத்தரவு பத்திரத்துடன் இடைஇடையே வீதியில் தடைகளைப் போட்டு தடை உத்தரவுப் பத்திரததை வழங்குவதற்கான முயற்சிகளை காவல்துறை மேற்கொண்ட போதிலும் இதனையும் மீறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் முஸ்ஸிங்களின் பங்களிப்பு மேலும் வலுப்பெற்றதால் சிறீலங்கா அரசாங்கம் தனது அரச இயந்திரமான காவல்துறையைப் பயன்படுத்தி போராட்டத்தை முடக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி கண்டதையடுத்து. போராட்டப் பேரணி தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி நகர்ந்து.

அகிம்சைவழிப் போராட்டத்தில் இடம்பெறும் ஆயுதப்படையினரின் கெடுபிடிகளை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் ஊடகவிலாளர்கள் திறமையாக செயற்பட்டமையினால் உடனடியான ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து ஆயுதப்படைகளின் கெடுபிடிகள் தனிந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், தாயகப்பகுதியில் இடம்பெறும் சிறீலங்கா அரசாங்கத்தின் காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல், ஆயுதப்படையினரின் கெடுபிடிகள், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை, காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பற்றி பொறுப்புக் கூறாமை போன்ற பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டி அதற்கான நீதியினைப் பெற்றுத்தருமாறு ஐ.நா.மனித உரிமை பேரவையை நோக்கி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான போராட்டப்பேரணி மீது தொடர்ந்து ஆயுதப்படைகளின் கெடுபிடிகள் நீடிக்கப்பட்டால் சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்திற்கு கெட்டபெயர் வந்துவிடும் என்பதற்காக இவ்வாறான கெடுபிடிகள் குறைந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad