புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2021

ஜெனிவாவில் புதிய பிரேரணை! - அதிகாரபூர்வமாக அறிவிப்பு.

www.pungudutivuswiss.com
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை குறித்து பதிய பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை தொடர்பான அனுசரணை நாடுகளின் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை குறித்து பதிய பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை தொடர்பான அனுசரணை நாடுகளின் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

ஜெனீவாவுக்கான இங்கிலாந்து தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான ஜூலியன் ப்ரைத்வைற், இலங்கைக்கான பிரேரணையைச் சமர்ப்பிக்கும் முடிவை நேற்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்துள்ளார்.

2021 பெப்ரவரி 22 முதல் 2021 மார்ச் 23 வரை நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வுக்கான திட்டங்கள் குறித்த ஆலோசனையின்போது இலங்கை தொடர்பான குழுவின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான பிரேரணை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என ப்ரைத்வைற் கூறியுள்ளார்.

மேலும், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அண்மையில் இலங்கை குறித்து வெளியிட்டு கடுமையான அறிக்கையின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

<

ad

ad