புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2021

பூநகரி சங்குப்பிட்டியில் பிள்ளையாரைக் காணவில்லை!

www.pungudutivuswiss.com
பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இருந்த பிள்ளையார் சிலையை கடந்த சில நாட்களாகக் காணவில்லை. ஏ-9 , 32 வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு
அருகில் இரண்டு ஆல மரங்களுக்கு கீழ் புதிதாக பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையானது தங்களது அனுமதியின்றி, தங்கள் எல்லை பரப்புக்குள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதனை அகற்றப் போவதாகவும் கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் கடந்த வாரம் பூநகரி பிரதேச செயலாளர் மற்றும் பூநகரி பொலிஸ் நிலையத்தில் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது குறித்த பிள்ளையார் சிலை காணாமல் போயுள்ளது. இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அகற்றியிருக்கலாம் என பொது மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையாருக்கு பதிலாக புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தால் அதனை சட்டத்தை காட்டி அதிகாரிகள் அகற்றுவார்களா எனவும் கேள்வி எழுப்பும் பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ad

ad