புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2021

இங்கிலாந்து அணி 6-விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘

டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணி ரோகித் சர்மா(49 ரன்கள்) ஓரளவு சிறப்பான துவக்கம் கொடுத்தார். ஆனால், பிற முன்னணி வீரர்களான  புஜாரா (17 ரன்கள்), விராட் கோலி (0) ரகானே (27 ரன்கள்) என  அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினர். 

எனினும் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் தனது வழக்கமான ஆட்டத்தை கையில் எடுத்தார். பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த ரிஷப் பண்டிற்கு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். அபாரமாக ஆடிய ரிஷப் பண்ட் சதம் விளாசி 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.  வாஷிங்டன் சுந்தரும் (96*) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  இந்திய அணி114.4 ஓவர்களில் 365 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 160-ரன்கள் முன்னிலை பெற்றது. 

இதையடுத்து, 2-வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி, துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் சுழல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அஸ்வின், அக்சர் சுழலில் சிக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.  

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (30 ரன்கள்) மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தார். ஆனால் பிற பேட்ஸ்மேன்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை. 3-ஆம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி 6-விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது.  இங்கிலாந்து அணி இன்னும் 69 ரன்கள் பின் தங்கியுள்ளதால், இந்திய அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

ad

ad