புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2021

யாழ் பேருந்து நிலையத்தில் குழப்பம்! முதல்வர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தை தவிர்த்து, தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கும் சட்ட வடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இன்று காலையில் இருந்து தனியார் துறையினர் சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் குறித்த பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுவதை புறக்கணித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் மத்திய பேருந்து நிலையத்திற்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் விஜயத்தினை மேற்கொண்ட யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள், நடத்துனர்களுக்கு குறித்த விடயத்தினை தெளிவுபடுத்தி, இன்றிலிருந்து நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து தான் வெளி மாவட்டத்திற்கான சேவைகள் இடம்பெறும் எனவும், குறிப்பாக யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும் பஸ் நடத்துனர் சாரதிகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.

இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் தமது உயர் மட்டத்திலிருந்து தமக்கு எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை எனவும் குறித்த விடயம் தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபையின் வட மாகாணத்துக்கு பொறுப்பான அதிகாரி அல்லது சாலை முகாமையாளருடன் தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர் .

ad

ad