புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2021

மகளிர் நாள்! யாழில் தீப்பந்தப் போராட்டம்

www.pungudutivuswiss.com
பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச நீதி வேண்டி மகளிர் தினமான இன்று (8) யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 9வது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இந்த போராட்டம் இடம்பெறும் இடத்திலேயே தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆசியுரை யோடு ஆரம்பித்த இந்த தீப்பந்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்பினர், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ad

ad