புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2021

தலைமன்னார் ரயில் விபத்துக்கு காவலாளியே காரணம்

www.pungudutivuswiss.com
தலைமன்னாரில் தனியார் பேருந்து ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளாகிய சந்தர்ப்பத்தில் ரயில்வே கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும்,கடவையில் தடை போடப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.


தலைமன்னாரில் தனியார் பேருந்து ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளாகிய சந்தர்ப்பத்தில் ரயில்வே கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும்,கடவையில் தடை போடப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து நேற்று மதியம் 2 மணியளவில் தலை மன்னார் பகுதியில் புகையிரதத்துடன்மோதி விபத்திற்குள்ளாகி 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற போது குறித்த தனியார் பேருந்தில் 30 பேர் பயணித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மாணவர்கள்,பயணிகள் உட்பட 25 பேர் உடனடியாக நோயாளர் வண்டி மூலம் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,பலத்த காயமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.செந்தூர்பதிராஜா தெரிவித்துள்ளார்.

ad

ad