புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2021

யாழ்.உடுவில் பிரதேசத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர் உட்பட மாவட்டத்தில் 12 பேருக்கும், மாகாணத்தில் 15 பேருக்கும் இன்று தொற்று உறுதி, பணிப்பாளர் தகவல்..

www.pungudutivuswiss.com
யாழ்.உடுவில் பிரதேசத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர் உட்பட மாவட்டத்தில் 12 பேருக்கும், மாகாணத்தில் 15 பேருக்கும் இன்று தொற்று உறுதி, பணிப்பாளர் தகவல்..
யாழ்.மாவட்டத்தில் 12 பேர் உட்பட 15 பேருக்கு வடமாகாணத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் இன்று சுமார் 668 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது யாழ்.மாவட்டத்தில் 12 பேருக்கும்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதன்படி யாழ்.மாவட்டத்தில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், ஆசிரியருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் யாழ்.சிறைச்சாலையில் 6 பேருக்கும், பருத்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்துறையில் தொற்று உறுதி செய்யப்பட்ட 3 போில் இருவர் ஏற்கனவே தனிமைப்படுத்தில் இருந்தவர்கள்.

மேலும் ஒருவர் பருத்துறை மாவட்ட நீதிமன்றில் பணியாற்றும் ஊழியர். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் இருவர் யாழ்.சிறைச்சாலை ஊழியர்களாவர். அதேபோல் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, புதுக்குடியிருப்பை சேர்ந்த இருவரும் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்

என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

ad

ad