புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2021

சஞ்சு சாம்சன் “அதிரடி சதம்” வீண் : 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி

www.pungudutivuswiss.com
14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 4-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பஞ்சாப் அணியின் சார்பில் கேப்டன் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இதில் மயங்க் அகர்வால் 14 (9) ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 28 பந்தில் (4 பவுண்டரி, 2 சிக்சருடன்) 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.


இந்த ஜோடியில் கே.எல்.ராகுல் 30 பந்தில் அரைசதம் அடிக்க, தீபக் ஹூடா 20 பந்தில் (1 பவுண்டரி, 6 சிக்சருடன்) அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய தீபக் ஹூடா 64 (28) ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்தில் (7 பவுண்டரி, 5 சிக்சருடன்) 91 ரன்கள் விளாசினார். பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக சேட்டன் சகாரியா 3 விக்கெட்டுகளும், கிரிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மணன் வோக்ரா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பென் ஸ்டோக்ஸ் (0) ரன் ஏதுவும் எடுக்காமல் வெளியேற, அவரைத்தொடர்ந்து வோக்ராவும் 12(8) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஜோடி அதிரடி காட்டியது. இதில் ஜோஸ் பட்லர் 25(13) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே 23(15) ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் அதிரடி காட்டிவந்த சஞ்சு சாம்சன் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்ததாக ரியான் பராக், சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களை திணறடித்தார். இதனிடையே அதிரடியாக ரன் குவித்து வந்த ரியான் பராக் 25(11) ரன்களில் வெளியேறினார். தனது அதிரடியை தொடர்ந்த சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டநிலையில் கடைசி ஒவரில் சஞ்சு சாம்சன் 119 (63) ரன்களில் ஆட்டமிழந்தார்.

முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 217 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், முகமது சமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றிபெற்றது.

ad

ad