புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2021

மீளத் திறக்கப்படுகிறது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஏப்ரல் 23ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.


யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஏப்ரல் 23ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ம் திகதி இடித்தழிக்கப்பட்டது.

எனினும் அதனைக் கண்டித்து எழுந்த மக்கள் எழுச்சியாலும் மாணவர்களின் போராட்டங்களினாலும் இருந்த இடத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது. இதன்படி பல்கலைக்கழக துணைவேந்தரினால் அடிக்கல்லும் நட்டு வைக்கப்பட்டது.

அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனக் குறிப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டு நினைவுத் தூபியை மீள அமைக்கும் பணிகள் மாணவர்களின் பங்களிப்புடன் ஜனவரி 15ம் திகதி ஆரம்பமானது

ad

ad