புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2021

ஆட்ட நாயகன் சாம் கரனா? : கோலி அதிருப்தி

www.pungudutivuswiss.com
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணத்தில் கைப்பற்றி அசத்தியுள்ளது. கோப்பை யாருக்கு எனத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில் ஷார்துல் தாகுர் 4/67 விக்கெட்களை கைப்பற்றியும், புவனேஷ்வர் குமார் 3/42 விக்கெட்களை கைப்பற்றியும் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

இதனால், ஆட்டநாயகன் விருது ஷார்துல் தாகுருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணியின் வெற்றிக்காகக் கடைசிவரைப் போராடிய சாம் கரனுக்கு (95*) இவ்விருது வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதை ஜானி பேர்ஸ்டோ தட்டிச்சென்றார்.
இதுகுறித்து போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, ஷார்துல் தாகுருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்காதது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
ஷார்துல் தாகுர் சிறப்பாகப் பந்துவீசினார். 4 விக்கெட்களும், 30 ரன்களும் அடித்த தாகுருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படாதது ஆச்சரியமாக இருந்தது. அதேபோல், புவனேஷ்வர் குமாருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பாடவில்லை. இருவரும் மிடில் மற்றும் பவர் பிளே ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசி, வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்” எனத் தெரிவித்தார்.
இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் 4 கேட்ச்களை தவறவிட்டனர். இதுகுறித்துப் பேசிய கோலி, “முக்கியமான நேரத்தில் வீரர்கள் கேட்ச்களை தவறவிட்டார்கள். ஒரு ஆட்டத்தின் போக்கையே மாற்ற கூடியது. வெற்றிவாய்ப்பைக் குறைத்துவிடும். நல்வாய்ப்பாக, பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்திற்கு அழுத்தங்களை உருவாக்கினார்கள்” எனக் கூறினார்.
இங்கிலாந்து தொடரின்போது இரண்டு மாதங்கள் மருத்துவப் பாதுகாப்பு வட்டத்திற்குள் இருந்தது குறித்துப் பேசிய கோலி, “இது சுலபமல்ல. அனைத்து வீரர்களுக்கும் ஒரேமாதிரியான மனநிலை இருக்காது. தற்போது நான் ஐபிஎல்லுக்காக தயாராகிவிட்டேன்” என்றார்.
ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad