புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2021

தமிழகத்தில் மேலும் 24,878பேருக்கு கொரோனா: 195பேர் உயிரிழப்பு

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 24,898பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 195பேர் உயிரிழந்து உள்ளனர். 20,062பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1,52,130மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 24,898பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,27பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங் களை சேர்ந்தவர்கள், 24,871பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,97,500ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,35,45,987மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 14,683பேர் ஆண்கள், 10,215பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 7,82,299ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 5,15,163ஆகவும் அதிகரித்து உள்ளது.

21,546பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,51,058 ஆக உயர்ந்தது.

நேற்று மட்டும் 195பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில்,81பேர் தனியார் மருத்துவமனையிலும், 114பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,974 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ad

ad