புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2021

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை கோரிய கோப்பாய் பொலிசாரின் மனு நிராகரிப்பு6 இடங்களின் நீதவான் தடை .யாழ் நீதவான் தடை இல்லை சட்டத்தில் ஓட்டையா

www.pungudutivuswiss.com
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நிராகரித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நிராகரித்துள்ளார்.

சம்பவம் இடம்பெறப் போவதைத் தடுக்கக் கோரும் ஏ அறிக்கையை தாக்கல் செய்யாது, சட்டம் மீறப்பட்டதாக கண்டறியப்பட்டால் பி அறிக்கையில் தாக்கல் செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை கோப்பாய் பொலிஸ் பிரிவில் தடை செய்யக் கோரி பொலிஸாரால் இன்று ஏ அறிக்கையில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இலங்கை குற்றவியல் சட்டம் 106 ஆம் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஏ அறிக்கையை கோப்பாய் பொலிஸார் முன்வைத்தனர்.

நினைவேந்தல் நிகழ்வுகளால் சட்டம் மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டால் பி அறிக்கையின் கீழ் விண்ணப்பம் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிவான், கோப்பாய் பொலிஸாரால் தடை கோரிய ஏ விண்ணப்பத்தை நிராகரித்தார்.

ad

ad