புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2021

வவுனியா நகரசபை உறுப்பினர்களை பதவிவிலக கோரிக்கை

www.pungudutivuswiss.com
தமிழரசுக் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர்களை பதவி விலகுமாறு கட்சியின் செயலாளரும், மாவட்ட தலைவருமான
ப.சத்தியலிங்கத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி 5 வட்டாரங்களையும்,புளொட் இரண்டு வட்டாரங்களையும் வெற்றி பெற்றதுடன் போனஸ் ஆசனத்தை ரெலோ தனதாக்கியது.

இந்நிலையில், வவுனியா நகரசபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 5 பேரில் இறம்பைக்குளம் வட்டார உறுப்பினர் செந்தில்ரூபன் கட்சி தாவிய நிலையில் அவர் நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு கிறிஸ்தோபர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஏனைய வட்டார உறுப்பினர்கள் 4 பேரும் தொடர்ந்தும் செயற்பட்டு வந்த நிலையில் குறித்த தேர்தலில் போட்டியிட்ட ஏனைய உறுப்பினர்களும் குறுகிய கால வாய்ப்பை வழங்கும் முகமாக வட்டார ரீதியாக வென்ற 4 உறுப்பினர்களையும் பதவி விலகுமாறு கட்சியின் செயலாளரும்,வவுனியா மாவட்ட தலைவருமான முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கோரியுள்ளார்.

கட்சியின் மாவட்ட கிளையின் தீர்மானத்திற்கு அமைவாகாவே இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா நகர வட்டார உறுப்பினர் ரி.கே.இராலிங்கம், பண்டாரிக்குளம் வட்டார உறுப்பினர் சுமந்திரன், குடியிருப்பு வட்டார உறுப்பினர் பரதலிங்கம்,வைரவபுளியங்குளம் வட்டார உறுப்பினர் நா.சேனாதிராஜா ஆகியோரையே இவ்வாறு பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளது.
அவர்களது இடத்திற்கு கட்சிக்காக செயற்பட்ட புதிய உறுப்பினர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், தாம் வட்டார ரீதியில் போட்டியிட்டு வெற்ற பெற்றவர்கள் என்ற அடிப்படையில் சில உறுப்பினர்கள் பதவி விலக விருப்பமில்லாது இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad