புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2021

ஜி.எஸ்.பியை இழந்தால் பொருளாதாரம் படு பாதாளத்தில் விழும்

www.pungudutivuswiss.com
ஜி.எஸ்.பி. சலுகையை இலங்கை இழக்குமாயின் தேசிய பொருளாதாரம் படு பாதாளத்தில் விழும். எனவே அரசியல் காரணிகளுக்கு அப்பால் சென்று நாட்டு மக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி ஜி.எஸ்.பி. சலுகையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.


ஜி.எஸ்.பி. சலுகையை இலங்கை இழக்குமாயின் தேசிய பொருளாதாரம் படு பாதாளத்தில் விழும். எனவே அரசியல் காரணிகளுக்கு அப்பால் சென்று நாட்டு மக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி ஜி.எஸ்.பி. சலுகையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

பிடிவாதத்துடன் செயற்பட்டு ஜி.எஸ்.பி. சலுகை இழக்கப்படுமாயின் சர்வதேச சந்தையில் இலங்கையின் ஆடை உற்பத்தி மற்றும் தேயிலைக்கு காணப்படும் வாய்ப்ப்புக்களை இழக்க நேரிடும். ஏற்கனவே பங்களாதேஷிடம் கையேந்தும் நிலைக்கு வந்துவிட்டோம். இந்நிலை தொடர்ந்தால் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்து டொலரின் விலை 300 ரூபாவை தாண்டும் எனவும் ரணில் எச்சரித்துள்ளார்.

'2017 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பெற்று நாம் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தினோம். ஆடை தொழிற்துறை, மீன்பிடித்தொழில் என்பன இதனால் மேம்படுத்தப்பட்டன. ஆனால் இன்று ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பிரச்சினை உருவாகியுள்ளது. ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை அற்றுப்போகக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று எமது சுற்றாத்துறை சார் வணிக செயற்பாடுகள் இல்லாமல் போயுள்ளன. அதே போன்று மீன்பிடித்தொழிற்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வோர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. எம்மிடம் நிதியின்மையால் பங்களாதேஷிடம் கடன்பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது எமக்கு ஆடைதொழில்துறை மற்றும் தேயிலை தொழிற்துறை மாத்திரமே எஞ்சியுள்ளன.

இந்நிலையில் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை நீக்கப்படுமாயின் அந்நிய செலாவணி குறைவடையும். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து, டொலரின் பெறுமதி 300 ரூபா வரை அதிகரிக்கக் கூடும். வேலை வாய்ப்புக்கள் அற்றுப் போகும்.

எனவே அரசியலை புறந்தள்ளி அரசாங்கமானது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பாதுகாப்பதற்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மக்கள் மீது மேலும் சுமைகளை சுமத்த வேண்டாம். நாட்டை சீரழிக்க வேண்டாம் என்றார்

ad

ad