புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூன், 2021

ஐரோப்பிய கால்பந்து போட்டி: ஹங்கேரியை பதம் பார்த்தது போர்ச்சுகல் - ரொனால்டோ புதிய சாதனை

www.pungudutivuswiss.com
ஐரோப்பிய கால்பந்து போட்டி: ஹங்கேரியை பதம் பார்த்தது போர்ச்சுகல் - ரொனால்டோ புதிய சாதனைஐரோப்பிய கால்பந்து போட்டியில் வெற்றியுடன் தொடங்கியுள்ள நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி தனது முதல் ஆட்டத்தில் ஹங்கேரியை சாய்த்தது. யூரோ போட்டியில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சரித்திர சாதனையை ரொனால்டோ படைத்தார்.

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.


இந்த நிலையில் புடாபெஸ்ட் நகரில் நேற்று அரங்கேறிய எப் பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல், ஹங்கேரி அணிகள் கோதாவில் குதித்தன. முதல் பாதியில் இரு அணியினரும் கோல் போடவில்லை. 42-வது நிமிடத்தில் கிடைத்த நல்ல வாய்ப்பை போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியாேனா ரொனால்டோ கம்பத்திற்கு மேலாக அடித்து வீணடித்தார்.

பிற்பாதியில் கடைசி கட்டத்தில் போர்ச்சுகல் அடுத்தடுத்து 3 கோல்களை போட்டு மிரட்டியது. 84-வது நிமிடத்தில் ரபெல் குயரிரோ கோல் போட்டார். 87-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கிய ரொனால்டோ, கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு கோல் போட்டு பிரமிக்க வைத்தார்.

முடிவில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை பதம் பார்த்தது. இந்த ஆட்டத்தில் 2 கோல் அடித்த 36 வயதான ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் (மொத்தம் 11 கோல்) அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன்பு பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி 9 கோல் போட்டதே சாதனையாக இருந்தது. அத்துடன் தொடர்ந்து 5 ஐரோப்பிய தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். போர்ச்சுகல் அணிக்காக அவர் 106 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு செவில்லியில் நடந்த ‘இ’ பிரிவு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, சுவீடனை எதிர்கொண்டது. இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணியினர் அடிக்கடி எதிரணி கோல் கம்பத்தை முற்றுகையிட்டனர். ஆனால் அதிர்ஷ்டம் தான் இல்லை. 16-வது நிமிடத்தில் பிரிகிக் வாய்ப்பில் ஸ்பெயின் வீரர் கோக்கே உதைத்த பந்தை சக வீரர் ஒல்மா தலையால் முட்டித் தள்ளினார். கோலாகி விடலாம் என்று எதிர்பார்த்த வேளையில் சுவீடன் கோல் கீப்பர் ராபின் ஒல்சென் இடதுபுறம் பாய்ந்து விழுந்து ஒற்றை கையால் தடுத்து நிறுத்தினார். மற்றொரு ஸ்பெயின் வீரர் அல்வரோ மோரட்டா அடித்த பந்து கம்பத்திற்கு மேல்வாக்கில் பறந்தது.

முதல் பாதியில் மட்டும் ஸ்பெயின் வீரர்கள் 419 முறை (பாஸ் செய்வது) பந்தை தங்களுக்குள் தட்டிக் கொடுத்தனர். ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் இதற்கு முன்பு எந்த அணியும் முதல் 45 நிமிடங்களில் இவ்வளவு முறை பந்தை ‘பாஸ்’ செய்தது கிடையாது.

பிற்பாதியிலும் ஸ்பெயின் வீரர்கள் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், சுவீடனின் கன கச்சிதமான தடுப்பாட்ட யுக்தியை கடைசி வரை முறியடிக்க முடியவில்லை. இறுதியில் ஒரு கோல் கூட வாங்காமல் சுவீடன் போராடி டிரா (0-0) ெசய்தது.

ad

ad