புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2021

அவசியம் ஏற்பாட்டால் நாடு முழுவதும் மீண்டும் பயணத்தடை

www.pungudutivuswiss.com

தொடர்ந்து நாட்டை முடக்கி வைக்க வேண்டிய அவசியமில்லையென கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

அதற்கு பதிலாக பல்வேறு பயணத்தடை விதித்து நாட்டை முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கொரோனா தடுப்பு செயலணி மற்றும் சுகாதாரப் பிரிவு இணைந்து, நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா நிலைமை தொடர்பில் ஆய்வு செய்து வருகிறது. அதில் கிடைக்கும் தரவுகளுக்கமைய தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அவசியம் ஏற்பாட்டால் நாடு முழுவதும் மீண்டும் பயணத்தடை விதிக்கப்படலாமென இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலைமையில் அந்த அவசியம் இல்லை. தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் எதிர்வரும் நாட்களில் மாற்றமடைய வாய்ப்புகள் உள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad