புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2021


மாண்புறு மனிதனுக்கு ஒரு நூற்றாண்டு
........................................................................
இராமலிங்கம் குலசேகரம்பிள்ளை 
வரதீவு மடத்துவெளி
 புங்குடுதீவு 7
மதிப்புக்குரிய  குலம் ஆசிரியருக்கு இன்று  நூறாண்டு அகவை .நினைக்கவே  எமது மண்ணுக்கும் சமூகத்துக்கும் பெருமையாகவே உள்ளது. இந்த விஞ்ஞான உலகத்தில் இயற்கைக்கு ஒவ்வாத  வாழ்க்கை முறையில்  கலாசாரப்பிறழ்வுகளுக்கு மத்தியில்  எதிர்நீச்சல்  அடித்து நூறை எட் டுவது என்பது  வியப்புக்குரியதே . அவரது  புனிதமான  எண்ணங்கள் . தூய்மையான ஆன்மீகமயமான வாழ்வுமுறை  .மக்களை  ஊரை நேசிக்கும் பண்பு என எல்லாமே  தான் அவரை இந்த இடத்துக்கு  அழைத்துவந்துள்ளது  .புங்குடுதீவில்  வரலாற்றுஆவணங்களில்  பதிவுகளில்  மதிப்புக்குரி யா குலம் வாத்தியாரின்   நாமம் பொறிக்கப்பட்டிருக்கும் . அந்த அளவுக்கு  அவரது  பொதுவாழ்க்கை  புனிதமானதும்  கனதியானதும் ஆகும்  .புங்குடுதீவு  7 ஆம் வட் டாரம் ஊரைதீவில் பிறந்துமடத்துவெளி வரதீவு பகுதியில் வாழ்ந்துவந்த இவர்  உயர்கல்வி கற்று மக்களோடு   மக்களாக மக்களை  ஆசிரியத்தொழிலை  உள்வாங்கி   சிறிதுகாலம் கிழக்கு  மாகாணத்தில் கடமையாற்றியவர்  தொடர்ந்து  புங்குடுதீவு  மகாவித்தியாலயத்தில் பணிபுரிய தொடங்கி  இறுதி ஓய்வுக்காலம் வரை  அங்கேயே  சிறப்பித்திருந்தார் . அவரது  அழகிய   தோற்றம்  உயர்ந்த  செக்கச்சிவந்தமேனி ,கம்பீரம், அமைதியான நடை  சிரித்த முகம் ஆசிரியருக்கே  உரிய அந்த  அகால  நஷனல் மேலங்கியும் வேட்டியும் அணிந்து  வீதியில் இறங்கினால்  ஹிந்தி பட கீரோக்களை  நினைவு படுத்தும் . உயர்வகுப்பு மாணவரிடையே  அந்த  காலங்களில் தொழில் கல்வி என்ற  திடடம் புகுத்தப்படட  நேரங்களில் அதற்கென மிக சொற்ப எண்ணிக்கை ஆசிரியர்களே இருந்த காலத்தில் நெசவுக்கற்கைக்கென்று  மகாவித்தியாலயத்துக்கு கிடைத்த சொத்தாகவே  இவர்  அறியப்படடார். நெசவு  சைவசமயம்  தமிழ்  கல்வி பணியில்  ஒய்வு பெறும்வரை  அரும்பணியாற்றியவர்  குலசேகரம்பிள்ளை ஆசிரியர் .  அத்தோடு மகாவித்தியாலயத்தில் சேவைக்காலத்தில் பாடசாலை  நிர்வாகத்தில்  கடடமைக்கப்பட்டிருந்த  நிர்வாகம்  விளையாட்டுத்துறை சமயநெறி உயர்தர மன்ற  நிர்வாகம் பெற்றோர் ஆசிரியர்சங்கம் என  அனைத்திலும்  பல்வேறுவிதமான பதவிகளில் இருந்து  அழகு படுத்தியவர்  மகாவித்தியாலய  வெள்ளிவிழா பணிகளில்கூட  சிறப்பான  செயல்பாட்டில் பேசப்படடவர் எஙபால்  குலசேகரம்பிள்ளை ஆசிரியர் .  முக்கியமாக  மஹாவித்தியாலத்தில் விளையாட்டுத்துறையில் இவரது பங்கு  வெற்றிகரமானது என்றே  சொல்லவேண்டும் . இல்ல  விளையாட்டுப்போட்டிகளில்  பல்லாண்டு காலமாக  மஞ்சள்  இல்லம்  முதலிடத்திலேயே தொடர்ந்திருந்து  பல சாதனைகளை  பதிவாக்கி  இருக்கிறது ,அதட்கான  முழுமுதல் காரணகர்த்தாவாக  அந்த இல்ல பொறுப்பாசிரியராக  இருந்து தனது ஆற்றலை  மெய்ப்பித்த பெருமை  உண்டு . மகாவித்தியாலயத்தில் கற்ற பலதலைமுறை  மஜால்  இல்ல மாணவர்களும்  இவரது உன்னத சேவையை  என்றும் நினைவுகொள்வார்கள் .
இந்த மகானுக்கு  சமூகநல  ஆன்மீகவழி  ஈடுபாடு  நிறையவே  உண்டு மடத்துவெளி  பாலசுப்பிரமணியர் கோவில் பல்லாண்டு காலம்  தலைவராகவே  இருந்து   தொண்டாற்றியவர். சின்னநல்லூர் என்று சிறப்பாக அழைக்கப்படும் மடத்துவெளி முருகன் கோவில் மிக உயர்ந்த கட்டுப்பாடு  நேரம்தவறாமை  ஒழுங்கு  நடவடிக்கைளில் பெயர் பெற்றது அந்த நிர்வாகத்தை  திறம்பட செய்யும் ஆற்றல்   மிக்கவராக இவர்  இருந்தமை தான் அந்த ஆலயத்தின் இப்போதைய வளர்ச்சிக்கும்உன்னதத்துக்கும்  வழிகோலியது 
இவற்றோடு எமது ஊரின் சிறப்புமிகு  மடத்துவெளி சனசமூகநிலையத்துக்கும் தலைவராகவே  நீண்ட ஆண்டுகள்  பணியாற்றினார் . எழுபதுகளின்  பின்னர் மீள் எழுச்சி  கண்ட சனசமூக நிலையத்துக்கு  இப்போதுள்ள  கட்டிட காணியை பெற்றுத்தருவதில் இவரது பங்களிப்பு சீரி யது .இவரது நண்பரும் உறவினருமான திரு .இளையதம்பி அவர்களிடம்  இந்த காணியை  கேட்டுப்பெற்றுத்தருவதில் நயம்பட முயற்சி செய்து வெற்றி கண்டார் .
சனசமூக நிலையத்தின் எல்லா விழாக்களிலும்  தலைமை தங்கி  பொறுப்புடன் நடந்து எங்களுக்கு வழிகாட்டியாக ஓங்கிநின்றார் .
சனசமூக நிலையத்தின் உறுப்பினர்கள்  பலரும் தலைமுறை இடைவெளி இருந்தும் எந்தவித தடபெருமையுமின்றி வயது வித்தியாசமில்லாமல் எல்லோருடனும்  இலகுவாகவும் நகைச்சுவையாகவும் பழகி வந்த அந்த காலங்கள்  எம் மனதில் இன்று நிலைத்து  நிற்கின்றன ,இவர்காலத்தில் வாழ்ந்த பல்வேறு துறைகளிலும் ஒன்றாகப்பயணித்த   தியாகராசா  ஆசிரியர் ,இலகுப்பிள்ளை ஆசிரியர் .சொக்கலிங்கம் ஆசிரியர்  .ஐயாத்துரை ஆசிரியர் போன்றோரையும் மதிப்பளித்து உள்வாங்கி ஒற்றுமை பேணி நகர்ந்த  வாழ்வியல்  முறையே அற்புதமானது  எடுத்துக்காடடானது  என்றே  சொல்லலாம் .மாண்புமிகு மகான்  குலசேகரம்பிள்ளை ஐயாவே  நீங்கள்  ஆள் போல் தழைத்து நித்திற்கும் குடும்பம் உறவுகள் சுற்றம் கூடியி ருக்கவே  இன்னும் பல்லாண்டு காலம்  மடத்துவெளி முருகன் அருள்  கூட சிறப்புற  வாழ்வீர்களாக .குருவாக  சமூகநலன் விரும்பிஜாக  ஆன்மீகவழிகாட்டியாக நீவீர்  வாழ்ந்த  உன்னத வாழ்க்கை  எம்மூர் வரலாற்றில் பதியப்படும் 

ad

ad