வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு முன்னெடுக்கப்பட்ட எழுமாறான அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் நேற்று 166 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது. வல்வெட்டித்துறை வடமேற்கு (ஜே/388) கிராம அலுவலகர் பிரிவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. அந்தக் கிராமத்தில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 940 பேர் வசிக்கின்றனர்.
தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் 8 பேருக்கு கொரோனா!
[Tuesday 2021-07-27 10:00]
தெல்லிப்பளைப் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனைகளின் அடிப்படையில் நேற்று 8 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தெல்லிப்பளைப் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனைகளின் அடிப்படையில் நேற்று 8 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவில் கடமையாற்றும் 43 வயதான அச்சுவேலியைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், அவர் பணியாற்றிய திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு நேற்று காலை முதல் தெல்லிப்பளை பிரதேச சுகாதார வைத்தியஅதிகாரி பணிமனையில் வைத்து அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே இன்று 8 உத்தியோகத்தர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாளாந்தம் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் தேவை நிமிர்த்தம் வந்து செல்லுகின்ற குறித்த பிரதேச செயலகத்தில் சில பிரிவுகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் சுழற்சி முறையில் பணிக்கு அமர்த்தப்படாமல் தொடர்ச்சியாகப் பணிக்கு வருகை தந்துள்ளமையுடன், முதலாவதாகத் தொற்று இனங்காணப்பட்ட உத்தியோகத்தரும் இறுதியாக வருகை தந்த நாளுக்கு முதல் நாள் கொரோனாத் தொற்று அறிகுறியுடனே (காய்ச்சலுடன்) முக்கியமான வேலை ஒன்றைச் செய்து முடிக்குமாறு பணிக்கப்பட்ட நிலையிலேயே பிரதேச செயலகத்துக்கு வருகை தந்திருந்தார் என்று பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனைய பிரிவுகளின் உத்தியோகத்தர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கிடைக்கப்பெறும் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் பலருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்படலாம் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.