மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்காவை 78 ஓட்டங்களால் தோற்கடித்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.


மூன்றாவது ஒருநாள் போட்டியில் 204 ஓட்டங்களை வெற்றிஇலக்காக கொண்டு விளையாடிய தென்னாபிரிக்க அணி இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளமுடியாமல் தடுமாறி 30 ஓவர்களில் 125 ஓட்டங்களிற்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.


தென்னாபிரிக்க அணியின் சார்பில் கெய்ன்றிச் கிளாசென் 22 ஓட்டங்களை பெற்றார்
இலங்கை அணியின் சார்பில் இன்று தனது முதலாவது ஒருநாள் போட்டியை விளையாடிய இளம் சுழற்பந்துவீச்சாளர் மகீஸ் தீக்சன நான்கு விக்கெட்களைவ வீழ்த்தினார்.
