கொரோனா தொற்று மற்றும் டெங்கு பாதிப்புக்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை இராணுவ பிரிகேடியர் டி.உதயசேன (வயது-53) நேற்று முன் தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை யில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார் என்றும் இராணுவ மரியாதையுடன் நேற்று முற்பகல் பொறளை பொது மயானத்தில் அவருடைய உடலம் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
அவர் கொழும்பு மாலபே பகுதியில் வசித்து வந்தார். பிரிகேடியர் டி.உதயசேனா 31 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றியுள்ளார்