புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2021

அரசியல் கைதிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு-சட்டமா அதிபர்

www.pungudutivuswiss.com
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு தீர்வொன்றை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் சில சரத்துகளை சீரமைப்பதற்காக தேசிய பாதுகாப்பு சபையினால் நியமிக்கப்பட்ட குழு இது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக வழக்கு தாக்கல் செய்யாது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேநபர்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய சிபாரிசுகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த குழு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த குழுவின் தலைவர், முன்னாள் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா கருத்து வெளியிடுகையில்,

“நாட்டிலுள்ள சிறைகளில் சுமார் 400 பேர் வரையில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான குற்றச்சாட்டு ஆவணங்களை நாளைய தினம் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உள்ளநாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad