புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2021

புலிகளை குற்றம்சாட்டும் ஆவணத்தை அனுப்பவில்லை.சி.வி.கே

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தக் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி கோரவில்லை என்று அந்த கட்சியின் மூத்த உறுப்பினர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தக் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி கோரவில்லை என்று அந்த கட்சியின் மூத்த உறுப்பினர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான இணைய வழியிலான கலந்துரையாடல் இடம்பெற்ற போது சிறிலங்கா இராணுவமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டனர் எனக் குறிப்பிடும் ஆவணத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்ப இணக்கம் காணப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதன்பின்னணியில் இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை தொடர்ந்தும் காட்டிக்கொடுத்து வருவதாக கூட்டமைப்பிற்கு எதிரான அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.

இந்த நிலையில் விடுதலை புலிகளின் யுத்தக் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் எனக் கோரும் ஆவணத்தை இலங்கை தமிழரசுக் கட்சி ஜெனிவாவிற்கு அனுப்பவில்லையென அக்கட்சியின் மூத்த உறுப்பினர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ad

ad