புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2021

www.pungudutivuswiss.com

பேச்சுக்களை நடத்த நாங்கள் தயார் - நிபந்தனையோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக நியூயோர்க் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை (António Guterres) சந்தித்து கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில் உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு புலம்பெயர் தமிழர்களிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam) தனது கருத்தினை தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும், யூத இனப்படுகொலையினைப் புரிந்த ஹிட்லர் ஆட்சியில் இருக்க முடிந்திருந்தால், புலம்பெயர் யூதர்களுடன் பேச ஹிட்லர் அழைப்பது போன்றே, புலம்பெயர் தமிழர்களுடன் பேசுவதற்கான இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் அழைப்பு உள்ளது.

இனப்படுகொலையினை புரிந்த அரசுடன் முக்கிய விடயமான தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக உரையாடல் நடத்துவது கடினமான ஒன்றாகும்.

எந்தவொரு அரசியல் தீர்வுக்கும் பொறுப்புக்கூறல் என்பது முக்கியமானதொரு முன்னவசிமாகும்.

இலங்கை தீவில் அமைதியை கொண்டு வருவதில் கோட்டாபய ராஜபக்சவிற்கு உண்மையான ஆர்வம் இருந்தால், முதற்படியாக, ஐ.நா மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையர் அல் ஹுசைன், 2015ல் பரிந்துரைத்திருந்த 'ரோம் உடன்படிக்கையில்' கைச்சாத்திட்டுக் கொள்ள வேண்டும்.


மேலும் கைச்சாத்திட்டு பின்னோக்கி காலத்தையும் உள்வாங்கியதாக வேண்டும். இறுதிப்போரில் நடந்த இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் விசாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, இலங்கையின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர் கைதிகள், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

'பொது மன்னிப்பு' என்ற 'விசர்' கதைகளை குப்பையில் போடுங்கள். யாரை யார் மன்னிப்பது? தமிழர் பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகள், அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வனப்பாதுகாப்பு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற அபகரிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும்.

அத்துடன் தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவமயமாக்கல் நீக்கம் (விலக்கி) செய்யப்பட வேண்டும்.
மேலும், காணாமல்போனோவர்களுக்கான அலுவலகத்தை ஒரு நடுநிலையான, நம்பகமான நிறுவனமாக மாற்றியமைக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நியமிக்கும் நிபுணர்களை உறுப்பினர்களாக நியமிக்கவும், பாதிக்கப்பட்டவர் உறவுகள் பங்கெடுக்கின்ற வகையிலான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அந்நிய முதலீடுகளை தீர்மானிக்கின்ற அதிகாரம் தமிழர்களுக்கு வழங்க வேண்டும்.

இறுதியாக, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், ஸ்கொட்லாந்து விவகாரத்தில் பொது வாக்கெடுப்புக்கான உறுதியான கால அட்டவணையை அமைத்து போல், தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவிதியை தாமே முடிவு செய்கின்ற வகையில் பொது வாக்கெடுப்புக்கான நடவடிக்கையினை தமிழர் அரசியல் தலைமைகளுடன் சேர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

இப்பொதுவாக்கெடுப்பில் சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தமிழீழம் உள்ளடங்க பல்வேறு அரசியல் தீர்வுகள் உள்ளடங்கலாக இருக்க வேண்டும்.

தேவையான இந்த செயல்வழிப்பாதையை இலங்கை அதிபர் நிறைவேற்றிய பிறகு, பேச்சுக்களை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இதுவே இலங்கை தீவின் நிரந்தரமான அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மற்றும் செழிப்புக்குமான வழித்தடமாக அமையும் என தெரிவித்துள்ளது.

ad

ad