புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2021

சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாணத்தில் 40 பேர் பாதிப்பு!

www.pungudutivuswiss.com


சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது

சேத விபரங்களில் அதிக காற்று காரணமாக நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஜே 02 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும், ஜே 04 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஜே 427 கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும் பாதிக்கப்பட்டனர்.

அத்துடன் சங்கானை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஜே 171 கிராம சேவகர் பிரிவில் நேற்று ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 4 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

ad

ad