கூட்டமைப்பின் வசமிருந்த காரைநகர் பிரதேச சபையும் ஈபிடிபி வசம் வீழ்ந்துள்ளது.
கூட்டமைப்பு சார்பு தவிசாளர் அண்மையில் மரணமடைந்த நிலையில் இன்று புதிய தவிசாளர் தெரிவிற்கான நடைபெற்றிருந்த நிலையில் சுயேட்சைக்குழுவிற்கு ஈபிடிபி ஆதரவளித்திருந்தது.
இதனையடுத்து ஜந்து வாக்குகளால் சுயேட்சைக்குழு வெற்றிபெற்றிருந்தது.
இதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு மூன்று வாக்குகளை பெற்றிருந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஈபிடிபி வெற்றி பெற ஏதுவாக நடுநிலை வகித்திருந்தது.
ஏற்கனவே வல்வெட்டித்துறை நகரசபையினையும் இதேபோன்றே ஈபிடிபி ஆதரவுடன் சுயேட்சைக்குழு கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.