புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2021

பிள்ளையாருக்கு மேல் அமர்ந்த புத்தரால் திருகோணமலையில் பதற்றநிலை!

www.pungudutivuswiss.com


திருகோணமலை – மூதூர், 64ஆம் கட்டை மலையடி பிள்ளையார் கோவிலில் உள்ள பிள்ளையார் சிலைக்கு மேல், புத்தர் சிலை வைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

திருகோணமலை – மூதூர், 64ஆம் கட்டை மலையடி பிள்ளையார் கோவிலில் உள்ள பிள்ளையார் சிலைக்கு மேல், புத்தர் சிலை வைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

    

இனந்தெரியாத விசமிகளால் நேற்றுமுன்தினம் இரவு இவ்வாறு புத்தர்சிலை வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மூதூர் பிரதேச இந்துக் குருமார்களால் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும், ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதற்கு முன்னரே அங்குவந்த மூதூர் பொலிஸாரால் குறித்த சிலை எடுத்துச் செல்லப்பட்டது.

64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக மூதூர் பிரதேச இந்துக் குருமார்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் செய்யமுற்பட்டபோது, மூதூர் கொட்டியாராம விஹாராதிபதி அவ்விடத்துக்கு வருகைதந்தபோது, சற்று பதற்ற நிலைமையும் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.

அவ்விடத்தில் நேற்றைய தினம் இந்துக்குருமார்களும் ,பொதுமக்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தியபோதும் குறித்த புத்தர் சிலையாரால் வைக்கப்பட்டதென்று இதுவரை கண்டறியப்படவில்லை.

இதுதொடர்பான மேலதிக விசாணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

64ஆம் கட்டை மலையடி பிள்ளையார் கோவில் பல வருடகாலமாக அருகிலுள்ள கிராம மக்களானாலும், திருகோணமலை - மட்டக்களப்பு வீதியூடாக பயணம் செய்கின்ற பொதுமக்களாலும் வழிபாடு செய்யப்படுகின்ற கோவில் என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad