புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2022

13ஆவது திருத்தத்தினை அரசியல் தீர்வாக ஒருபோதும் ஏற்கவில்லை!

www.pungudutivuswiss.com


13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொண்டு எந்தவொரு தருணத்திலும் கோரிக்கை விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொண்டு எந்தவொரு தருணத்திலும் கோரிக்கை விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

அத்துடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இட்டுக்கட்டப்பட்ட கதைகளைக் கூறி பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கேரிக்கு மேலும் தெரிவித்ததாவது, 13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான தீர்வாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் கூறியது கிடையாது.

தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்தாலும் சரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி, தமிழரசுக்கட்சியாக இருந்தாலும் சரி இந்த நிலைப்பாட்டில் மாற்றங்கள் காணப்பட்டிருக்கவில்லை.

இந்தப் பின்னணியில் தற்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய ஆவணத்திலும் அவ்விடயங்கள் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தில் கையொப்பமிட்ட தலைவர்களும் மிகத் தெளிவாக அந்த விடயத்தினை கூறியுள்ளனர்.

இருப்பினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் குறித்த ஆவணத்தினை திரிவுபடுத்தி இட்டுக்கட்டப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தி பொய்யான பிரசாரத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

எம்மைப்பொறுத்தவரையில், பிரிக்க முடியாத, பிளவுபடுத்த முடியாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் இணைந்த வடக்குரூபவ் கிழக்கில், தங்களைத் தாங்களே ஆட்சி செய்யக் கூடிய வகையிலும்ரூபவ் தங்களின் தலைவிதியை தீர்மானிக்க கூடிய வகையிலும் மீளப்பெறமுடியாத அதிகாரப்பகிர்வு செய்யப்பட்டு சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும். அதுவே தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாக இருக்கும்.

ஆனால், 13ஆவது திருத்தச்சட்டமானது, தற்போதைய அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். அத்திருத்தச்சட்டமானது அதிகாரப்பகிர்வின் ஒருவடிவமாக அரசியல் அமைப்பில் காணப்படுகின்றது. ஆகவே அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் மாறிமாறி இருந்த தலைவர்கள் அனைவரும் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்றே வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்கள். பிரேமதாச காலத்தில் மங்கள முனசிங்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

சந்திரிகாவின் காலத்தில் பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தலைப்பில் தீர்வுப்பொதி தயாரிக்கப்பட்டது. பின்னர் ரணில் விக்கிரமசிங்க காலத்தில் ஒஸ்லோ பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன. மஹிந்த ராஜபக்ஷ 13பிளஸ் என்று குறிப்பிட்டதோடு சர்வகட்சி அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் மைத்திரி-ரணில் கூட்டாட்சியில் புதிய அரசியலமைப்புக்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இவற்றில் கோட்டாபய கூட அரசியல் தீர்வு பற்றி இந்தியப் பிரதமருக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இவ்வாறான பின்னணியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும். அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காகவே நாம் ரூடவ்டுபாட்டை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றோம்.

விசேடமாக இந்தியா தமிழர்களின் விடயத்துடன் நீண்டகாலமாக தொடர்பு பட்டுள்ளது என்ற அடிப்படையில் அவர்களுக்குள்ள தார்மீக கடமையை முன்னெடுக்குமாறு நாம் கோரியுள்ளோம். நாம் எமது மக்கள் வழங்கிய ஆணையை மீறாது சரியான திசையில் பயணிக்கின்றோம். இதனை சில தரப்புக்கள் அரசியலுக்காக குழப்புவதற்கு முனைகின்றன என்றார்

ad

ad