அவுஸ்திரேலிய அரசுக்கே செக் வைத்து விட்டார் இந்த ஜோ-கோ-விச். உலகின் நம்பர் 1 டெனிஸ் நட்சத்திர வீரராக இருப்பவர் ஜோ-கோ- விச். இவர் சேர்பியா நாட்டைச் செர்ந்தவர். 34 வயதான இவர், அவுஸ்திரேலியாவில் நடக்கும், கிரான் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள முறையாக விண்ணப்பித்தார். அவுஸ்திரேலிய அரசு, 2 தடுப்பூசிகள் போட்ட விளையாட்டு வீரர்கள் மட்டுமே தமது நாட்டுக்குள் வர முடியும் என்ற கட்டளையை பிறப்பித்து இருந்தது. ஆனால் ஜோ-கோ- விச் சில மருத்துவ காரணங்களால் எந்த ஒரு தடுப்பூசியும் எடுக்கவில்லை. ஆனால் அவர் முறைப்படி, அவுசி டென்னிஸ் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இதனை அறிவித்து சரியான, அணுமதியைப் பெற்றார். அவர் அவுஸ்திரேலியா வந்த உடனே குடிவரவு அதிகாரிகள், ஜோ-கோ- விச்சின் விசாவை ரத்துச் செய்து, அவரை நாட்டை விட்டு திருப்பி அனுப்ப முனைந்தார்கள். கடந்த 4 நாட்களாக அவர் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் இருந்துள்ளார்… இதேவேளை அவரது வக்கில் அவசரமாக… ஒரு வழக்கை தொடுத்தார்…
நீதிமன்றில் அனைத்து ஆதாரங்களையும் முன் வைத்தார் ஜோ-கோ- விச்சின் வக்கீல். இதனை தீர விசாரித்த நீதிபதி. அவுஸ்திரேலிய அரசு விசா வழங்கவேண்டும் என்றும். ஜோ-கோ- விச்சை உடனே நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனை அடுத்து பெரும் களொபர நிலை தோன்றியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், பொலிசார் அவரை விடுதலை செய்து விட்டார். ஆனால் அரசுக்கும் நீதித் துறைக்கும் மோதல் ஆரம்பமாகி விட்டது. மீண்டும் ஜோ-கோ- விச்சின் விசாவை கான்சல் செவதாக, குடிவரவுத் துறை அமைச்சர் அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது