புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2022

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மோசமானது

www.pungudutivuswiss.com


அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று ஆற்றிய உரை, ”மிக மோசமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று ஆற்றிய உரை, ”மிக மோசமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கருத்து வெளியிடுகையில்,

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி இன்று அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை ஆற்றினார்.

இதன்போது அவர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து எந்த காத்திரமான விடயத்தையும் முன்வைக்கவில்லை. மாறாக அரசியல் கொள்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு அரசாங்கத்தின் வாழ்வாதார செயற்பாடுகளில் ஒத்துழைக்க வேண்டும் என்று வடக்கு கிழக்கு பிரதிநிதிகளுக்கு அவர் அழைப்பு விடுத்ததில் எவ்வித யதார்த்தமும் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்காகவே மக்கள் அதற்கு வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். எனில், அந்த கொள்கைகளை விட்டு விட்டு எவ்வாறு செயற்பட முடியும்.

இலங்கையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையென்ற அடிப்படையிலேயே ஜனாதிபதியின் உரை அமைந்திருந்ததாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

ad

ad